Sunday, December 3, 2006

"காதில் கம்மல் போட்டிருப்பான்...
கடையில் உட்கார்ந்திருப்பான்
அஞ்சு (ஐந்து) பைசாக்கு வெல்லக்கட்டி கேட்டா
ரெண்டு கொடுப்பான்
அவன் யார்...? "

என்ற விடுகதை உருவான வரலாறு மிகவும் சுவாரஸ்யம்...
இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது...

ஒரு முறை என் அன்னை அவர்கள் என்னை கடைக்கு அனுப்பி வெல்லக்கட்டி வாங்கி வரச்சொன்னார்...

அந்த கிராமத்தில் நிறைய கடைகள் இருக்கும் . மிகப்பெரிய கிராமம். சிவகாசியின் பெரும் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

எங்கள் கிராமத்தின் எல்லையில்தான் அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளும், தீப்பெட்டித்தொழிற்சாலைகளும் ஏற்படுத்தப்பட்டன...

(ஊருக்குள்ளும் பின்னர் தீப்பெட்டித் தொழிற்சாலை ஏற்பட்டது... இதில்தான் பின்னாலில் நாங்கள் வேலைக்கு சேர்ந்தோம்... குழந்தை தொழிலாளர்களாக....)

இன்று அமெரிக்கா, கனடா என்று எப்படி குடிபெயர்கின்றனரோ, அன்று அப்படி நிறைய மனிதர்கள் எங்கள் கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர். எனவே எங்கள் கிராமம் அன்றைய நியூ யார்க் என அழைப்பதில் தவறில்லை...

புதுப்புது மனிதர்கள்... புதுப் புதுக் கடைகள்... என இப்பொழுதும் இன்னமும் பிரமாண்டமாய் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது.....அதன் நிஜ பரிமாண்த்தை இழந்து விவசாயம் கெட்டு கந்தக பூமியாகிப்போனது...

புல் பூண்டு இல்லாமல் நாகசாகி (நம்ம நாகசாமி அண்ணாச்சி ஒருவேளை ஜப்பானில் ஆட்சி செய்திருப்பாரோ...?!) ஹிரோசிமா வாகிப்போனது என் கண் முன்னாலேயே...!

பசுமையாய் செழித்திருந்த பூமி... முப்போகமும் சாகுபடி செய்த விவசாயிகள், விவசாயம் பொய்த்ததால் வறுமையின் காரணமாக தங்கள் நிலங்களை பட்டாசுத்தொழிற்சாலைகளுக்கு (நாங்கள் உட்பட) விற்க வேண்டிய பரிதாப நிலை....

சுற்றுப்புற ஆர்வலர்களும், Environment Science, Ecology என சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு அப்பொழுது எங்களுக்கு இல்லாததால்... பசுமை கருமையாகிப்போனது...

ம்ம்ம்... அது ஒரு கனாக் காலம்...!

சரி விஷயத்திற்கு வருவோம்...

அப்பொழுது நான் மிகவும் சிறு பையன்... சரியான விவரம் தெரியாது... அப்பொழுதெல்லால் ஐந்து பைசாக்கள் புழக்கத்திலிருந்தன...

ஐந்து பைசாவிற்கு மூன்று வெல்லக்கட்டிகள் தருவார்களாம். இதெல்லாம் எனக்குத்தெரியாது...

கடை வீதிக்கு சென்றேன்...மனம் போன போக்கில் ஒரு கடையில் நின்றேன்...

ஏனெனில் அந்தக் கடைக்காரரின் உருவம் பிடித்திருந்தது... அவர் காதில் வளையம் தொங்கியது... (காதில் போடுவதெல்லாம் கம்மல் என்றே எண்ணியிருந்தேன் அந்த வயதில்...)

ஐந்து பைசா கொடுத்து வெல்லக்கட்டி கேட்டேன். புன்னகத்தே வாரே இரண்டு வெல்லக்கட்டி கொடுத்தார். நான் வாங்கிக்கொண்டு உற்சாகமான மனநிலையில் வந்தேன்....

வீட்டிற்கு வந்தால் நான் ஏமாற்றப்பட்டதாய் பெரியவர்கள் சொன்னார்கள்... எங்கு வாங்கினாய் என்று கேட்டனர்...

"காதில் கம்மல் போட்ருப்பா
கடையில ஒக்காந்திருப்பா
அஞ்சு பைசா கொடுத்து 'வெல்லக்கட்டி கொடுங்க' னு கேட்டேன்.. இம்புட்டுதா கொடுத்தாரு... "
என்று எனக்குத்தெரிந்த மழலை பாஷையில் சொன்னேன்...

பின்னர் அதுவே விடுகதையாகிப்போனது... ஊரெல்லாம் இந்த விடுகதை பரவி மிகவும் பிரபலமாகிவிட்டேன்... அதை லயத்துடன் பின்னாட்களில் என் நண்பர்கள் சொல்வார்கள்...

அந்தக் கடைக்காரரின் மகனும் என் பாடசாலையில் எனக்கு சீனியராய் படித்தார்...

கனவு தொடரும்......
- Show quoted text -



On 12/3/06, Viji <vselvaratnam@gmail.com> wrote:
On 12/3/06, வேந்தன் அரசு < raju.rajendran@gmail.com> wrote:

பூச்சாண்டி என்றால் குழந்தை பயப்பட வேண்டாமா...? அதுவும் என்னைப் பார்த்துதானா அந்தக் குழந்தை இப்படி கேட்கவேண்டும்...?


பார்க்க கமல்ஹாசன் மாதிரி இருந்தா யார் பயப்படுவா? அது பெண் குழந்தையோ?


:-)))))))))))
வேந்தன் அரசுசின்சின்னாட்டி(வள்ளுவம் என் சமயம்) -- என்றென்றும் நட்புடன்+நம்பிக்கையுடன்உங்கள் சுதனின்விஜி--~--~---------~--~----~------------~-------~--~----~ நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward

No comments: