Wednesday, December 13, 2006

அது ஒரு கனாக்காலம் - 9

அது ஒரு கனாக்காலம் - 9

நானும் சேதுவும் ரெடியானாக்கூட உள்ளுக்குள்ள குப்னு வேர்த்துச்சு...

சாமி இல்லன்னு கூட ஆயிரந்தடவ பேசிருக்கோம்...பிரச்சாரம் பண்ணிருக்கோம்... (அப்ப அப்டி ஒரு எண்ணம் வந்தாலே எதோ கொலக் குத்தம் செஞ்ச மாதிரி எல்லாருமே பாப்பாங்க...)

அப்டி சவடாலா பேசிட்டு நைசா யாருக்கும் தெரியாம , "யப்பா... எதொ சின்னப் பசங்க தெரியாம திட்டிட்டோம்... நீ தான் சாமியாச்சே... இதுக்கெல்லாம் தண்டன கொடுத்தா அப்றம் அது நல்லால்ல ஆமாம்...." என்று ரகசியமாக சண்டை போட்டுவிட்டு வந்திருக்கிறோம்..

இதுவரைக்கும் ஒண்ணும் ஆகல... எல்லாம் அந்த பகவான் புண்ணியத்ல ஒவ்வொரு ஆபத்லருந்து தப்சிட்டே வர்ரோம்...

ஆனா பேயின்னு வர்ரப்ப கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு...

என்னதான் தாம் தூம் னு தெகிரியமா

பேசுனாலும் காரியம்னு வர்ரப்ப பயமாத்தான் இருந்துச்சு...

அதனால ஒரு ரெண்டு மூணு நாள் post pone பண்ணோம்...

சரின்னு நம்ம ஜனகராஜுப் பயலையும் அந்த கர்லாக் கட்டை மணிப்பயலையும் ரெடிபண்ணோம்...

(இவன் ஸ்டலை ஏற்கெனவே விளக்கியாச்சி பழைய கனாக்காலத்ல...)

"சரின்ணே... நான் பெரிய கட்டயவே எடுத்துட்டு வாரேன்... நீங்க முன்னாடி போங்க... நான் உங்களுக்கு பின்னாடி வாரேன்...பேய் அசந்த நேரத்ல அதனோட தலயில ஒரே போடு போட்டுர்றேன்" என்றான் கர்லாக்கட்டை மணி...

என்னடா இவன் நம்மை முன்னாடி போகச்சொல்றானேனு ஒரே கவலையா இருந்துச்சு....

அதனால அதுக்கு ஒரு குறுக்கு வழி கண்டுபிடிச்சோம்...

பகல்ல அந்த இடத்துக்கு போயி... அதோட ஒவ்வொரு அசைவையும் மனசுல பதிய வச்சோம்...எதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா என்ன பண்றது அப்டீனு...

இப்ப என்னவோ பிராஜட்டு மேனேஜ்மெண்ட்டு பிராஜட்டு மேனேஜ்மெண்ட்டு னு தல தல யா அடிச்சிக்கராங்கலே... அப்பவே நாங்க IIM Professors க்கு பாடம் சொல்லிக்கொடுக்ற அளவுக்கு தெரிஞ்சிருஞ்சிச்சி...

Technology யப் பொறுத்தமட்டும் அந்த MIT (Massachusettes Institute of Technology) க்கும் NASA வுக்கும் visiting professor ஆ வர முடியுமா ன்னு கேட்டாக...

அடப்போங்கப்பா... அங்கனயெல்லாம் எங்களால வர முடியாது.... தலக்கு மேல ஆயிரம் வேல (அப்டி என்ன வேலை...? ன்னு யாரோ.. .. எசகுபிசகா கேக்றமாதிரி காதுல விழுதே...?) ... கெடக்குது....." அப்டீன்னு சொல்லிட்டோம்...

System Simulation எல்லாம் அப்பவே பண்ணி அந்த இடத்துக்கு " எப்டி போயிட்டு உயிரோட திரும்பி வாரது...." னு ஒரு பெரிய நோட்டு பொய்த்தகத்ல ஒவ்வொருத்றக்கும் தோணிண ஐடியாக்கள எழுதி வெச்சி ஆராய்ச்சி பண்ணினோம்...

நம்ம ஜனகராஜுப்பய யாரோ ஒரு சாமக்கோடாங்கிய கரெய்ட்டு பண்ணி ஆளுக்கொரு தாயத்து வாங்கியாந்தான்...

மணிப்பய பெரிய கட்டய எடுத்துகிட்டான்...

சேதுப்பய பக்கத்துவீட்லருந்து பேனா பேட்டரிய லவட்டீட்டு வந்துட்டான்....

தெனம் ஒத்திகை நடக்கும்... சாயங்காலம் 5 மணிக்கு போறது... அந்த நிகழ்வுகள நோட்ல எழுதுதறது...

எங்க அஞ்சி வரி வீட்டுப்பாட நோட்டு ஃபுல்லா அதத்தான் தெனம் எழுதி .... ரெட் இங்க் வச்சி ரைட்டெல்லாம் எப்டியோ கூட்டத்தோட கூட்டமா வாங்கியாச்சி...வாத்தியார் அசந்த நேரத்ல...!

அப்றம் 6 மணிக்கு...இப்டி மாறி...மாறி... ராத்ரி 10 மணி வரைக்கும் போயாச்சி படிப்படியா...

ராத்ரி 12 மணிக்குத்தான் எங்க கெணக்கு...

நல்ல இருட்டுக்கு பழகிட்டோம் நாங்க...

ஊர்லயும் சரி பள்ளிக்கூடத்லயும் சரி யாருக்கும் தெரியாது... ரொம்ப ரகசியமா வச்சிருந்தோம்...

ஒரு வழியா ராத்ரி நம்ம பசங்களோட அந்த 12 மணிக்கு அங்க போயி ஆஜராகிட்டோம்...

" யார்ரா அது ஒளிஞ்சிருக்றது....? நல்ல ஆம்பளன்னா வெளிய வாடா....." ன்னு கத்ரோம்...

( எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைக்காகத்தான்.... ரைட்டோ ராங்கோ... எப்பவுமே நாம முந்திக்கனும்.. அப்பத்தான் நம்ம மேல நாயம் இருக்ற மாதிரி தெரியும்... அப்டீன்றது எங்களோட ஃபிளாசபி...)

நாங்க கத்துன கத்துல , "புஸ்..."ஸுனு ஒரு நல்ல பாம்புதான் பொந்துக்குள்ளருந்து வந்துச்சு....

அட இப்பத்தான் சொன்னேன்... அதுக்குள்ள இந்த பாம்பு நம்ம ஃபிளாசபிய கப் னு புடிச்சிருச்சே... ?)

"திருடனுக்கு தேள் கொட்டியது" இதை வாக்கியத்தில் அமைத்து எழுதுக ன்னு தமிழ்ல ஒரு 3 மார்க் கேள்விக்கு இதவிட ஒரு லைவ்வான ஆன்சர் கெடைக்குமா...... ?


கனவு தொடரும்....



பின் குறிப்பு:

பாம்புக்கு காது கேக்காதுடா மடையா...ஒரு லெவல்லா ரீல் சுத்து...னு ஒரு எண்ணம் இப்ப உங்க மனசுல ஓடிட்ருக்கணுமே..... ? கரைட்டா.....?

கத்துனதால யா... இல்ல பயபுள்ளக பண்ண சேட்டைகளாலயான்னு தெரியல்ல...

ஆனா நிஜம்.. நீங்க வேணா அந்த பாம்பப் பிடிச்சிக் கேட்டுப்பாருங்க.... அப்பதெரியும் சங்கதி...!)

இதென்ன பாதரவே... ? பேயி பிடிக்கப்போனா பாம்பு வர்ரது......?

No comments: