Sunday, December 3, 2006

அது ஒரு கனாக்காலம்...

நண்பர்களே என் சின்ன வயது(சேட்டைகளை) அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றேன்... உள்ளதை உள்ளபடி சொல்கிறேன்.. எனவே என் மீது கோபம் கொள்ளாதீர்கள்...

சின்ன வயதினிலே....

சிவகாசிக்கருகே 2 மைல் கல் தொலைவில் நாரணாபுரம் என்றொரு கிராமம். சிட்டிசன் அஜீத் ஸ்டைலில் சொன்னால், "நாரணாபுரம் னு ஒரு கிராமம் இருந்துச்சி தெரியுமாலே...? '

அப்ப இப்ப இல்லியா...?

அது நகரமாயமாகிக்(நரக மயமாகிக்) கொண்டிருக்கிறது... கந்தக பூமியாக கொஞ்ச்ம் கொஞ்சமாய் தன்னை மாற்றிக்கொண்டது....

அது ஒரு கனாக்காலம்...!
எங்கு பார்த்தாலும் பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்று நிலம், தாவர இனங்களால் போர்த்தப்பட்டிருக்கும்...வற்றாத ஜீவநதி போல நீர் வந்துகொண்டிருக்கும்...

ஒருமுறை மழைபெய்து எங்கும் வெள்ளக்காடு...
எங்களுக்கோ ஒரே மகிழ்ச்சி... ஏனெனில் பள்ளிக்கூடம் போகத்தேவையில்லையல்லவா...?

"I love School, when it is closed...." இதுதான் என்னுடைய நிஜ சுபாவ்மாய் இருந்தது...நீண்ட நாட்களாய் பாடசாலை செல்லாமல் இருந்திருக்கிறேன்... பாடசாலைப் போனதாய் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தோட்டத்தில் நீச்சலடித்து விளையாடிக்கொண்டிருப்போம்...

நான், சேது, இலட்சுமனன் மூவரும் ஒரே டெஸ்க் மேட் என்பதைவிட உயிர்மேட் என்பதெ சரி. நாங்கள் எங்களைவிட பெரிய அண்ணாக்களுடன் மட்டுமே நட்பு கொள்வோம்...வகுப்பறை நண்பர்களுடன் அவ்வளவாக பரிச்சயம் வைத்துக்கொள்வதில்லை...

உணவு இடைவேளையின் போது (பள்ளி செல்லும் நாட்களில்தான்..!) அக்கர்ண ஊரணிக்கு ஓடுச்சென்று நீச்சலடித்து விளையாடுவோம்...

ஒருமுறை அப்படி செல்லும்பொழுது...

கரையில் ஒரு சிறுவன் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் நீச்சலடிப்பதை வேடிக்கை பார்துக்கொண்டிருந்தான்... இவன் பாலர் பள்ளி மாணவனாய் இருக்க வேண்டும். நாங்களோ ஐந்தாம் வகுப்புப் படிக்கும் பெரிய(உயரத்தில் அல்ல, படிப்பில் அல்ல..வகுப்பிலும் அல்ல...8ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி) மாணவர்கள்.....!

தூரத்தில் அச்சிறுவனின் தாத்தா வந்து கொண்டிருந்தார்...

7 ஆம் வகுப்பு கண்ணதாஸ் (எங்கள் நண்பர்கள் அனைவருமே சீனியர்கள்) உடனே அச்சிறுவனை இழுத்து ஊரணியில் முக்கினான்...

ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த தாத்தா எங்கள் வீட்டில் சொன்னால் எனக்கு செம்த்தியாய் விழும்... அதைவிட அந்த சிறுவனை ஏன் அதுவும் அவனது தாத்தா வரும்பொழுது முக்கினான்...?

கனவு தொடரும்....

No comments: