Wednesday, December 13, 2006

அது ஒரு கனாக்காலம் - 8

அது ஒரு கனாக்காலம் - 8

அஞ்சாப்பு படிக்றப்ப இது நடந்துச்சு...

அப்ப எங்க கிளாஸ்ல கோபால்னு ஒரு பையன் இருந்தான். நாங்க அவனை கொக்கு கோபால்னுதான் கூப்டுவோம். அவ்ளோ ஒசரமா இருப்பான் அப்பவே... டாக்டர்கள் அவனுக்கு எதோ ஒரு சுரப்பி அதிகமா சுரந்துடுச்சி அதான் காரணம்னு சொன்னாங்க...

அப்ப எங்க ஊர்ல ஒரு முனி மரம் ரொம்ப பேர் போனது... அதுல என்ன விசேஷம் னு கேக்றீங்களா...?

அங்கனயெல்லாம் பகல் 12 மணிக்கு ராத்ரி 12 மணிக்கு னு முனி நடமாட்டம் இருக்கும்...


நெறய பேர அடிச்சி கொன்னுருக்கு.. முனியோட அஞ்சு விரலும் அப்டியே முதுகுல பதிஞ்சுடும் னு ஊர்ல கதயா சொல்லுவாங்க....

எல்லோருக்குமே பயம்...

அதனால அந்தப் பக்கம் யாருமே போகமாட்டாங்க...
சின்னப்பசங்க.. மூச்..! அதப் பத்தி நெனக்கவே கூடாது...

எங்களுக்கு ஒரு ஆசை... நிஜமாவே இந்த பேயி, பிசாசு, முனி இதெல்லாம் இருக்கா... இல்லை புருடாவான்னு தெரிஞ்சிக்கணும்னு ஆசப்பட்டோம்...

முனியும் கருப்பசாமியும் அய்யனாரும் சாமிக லிஸ்ட்... ஆனாலும் ஒரு பயம்...

அட பயபுள்ளகளா... சாமின்னா யாராவது பயப்படுவாகளா...? சாமி நமக்கு நல்லதுதானே செய்யும்... இதென்ன இப்டி பேசுறாக ன்னு நெனச்சோம்... இது துடியான சாமியாம்...


அதான் கோவம் பயங்கரமா வருமாம்... வெளாட்டு (விளையாட்டு) வெச்சிக்கக்கூடாதாம்...

இந்த மரத்துக்கு இன்னொரு நா வர்ரேன்...

இப்ப எங்க ஊர்ல (இது எல்லா ஊர்லயும் இப்டி ஒரு கத இருக்கு... ஆனா இங்கன நடந்தது நிஜம்... ஏன்னா நாங்கதானே அத கிரியேட்டு
(கிரியேட் ற்கு நல்ல கிராமிய சொல் என்ன...? உம்....Town - டெவுனு... Shop - ஷாப்புகட...Photo - போ(Bo)ட்டா... ) பண்ணோம்...

நடுநிஷி யில ஊருக்கு வெளியே இருக்ற ஒரு வேப்ப மரத்ல ஆணி அடிச்சிட்டு உயிரோட திருமபி வர முடியுமா...?...

இதான் அப்ப ஹாட் டாபிக்...

கத கதயா சொன்னாங்க...

நெறய பேரு ரத்தம் கக்கி செத்துப்போயிட்டாங்களாம்... ஆணி அடிச்சி திரும்புன உடனே ஒருத்தன் வாயில இருந்து ரத்தம் கக்கி செத்துப்போனானாம் அப்டினெல்லாம் பயமுறுத்தனாங்க...

இன்னொரு தடவ ஒரு ரொம்ப பெரிய அண்ணா(இளைஞன்) நட்ட நடு ராத்ரியில டெவுன்ல இருந்து ரெண்டா(ம்) [Second Show cinema] ஆட்டம் பாத்துட்டு நடந்து வந்துட்ருந்துச்சாம்...

அப்ப நடுப்பாதையில யாரோ உக்காந்துட்டு கையில் ஒரு மிட்சர் பொட்டலம் மாதிரி ஒண்ண(காகிதத்தில் கூம்பு வடிவில் மடித்து கொடுப்பங்கள்ள ...) வச்சி தின்னுட்ருந்துச்சாம்...

"என்னப்ப தனியா நடந்து போற...பேயி, பிசாசு னு பயமா இல்லையா...? நான் வேண்ணா தொணக்கி வரட்டா..."ன்னு கேட்டுச்சாம்....


அந்த அண்ணணோ ஏற்கெனெவே பயந்து போயிருந்துச்சா.. அதுனால சரின்னுச்சாம்.....


"இந்தாப்பா கடலைப் பருப்பை எடுத்துக்கோ... சாப்டுகிட்டே நடக்கலாம்.." னுச்சாம். இந்த அண்ணனும் சரின்னுட்டு கடலைப்பருப்ப எடுத்து வாயில போட்டுச்சாம்....

அமாவாசை இருட்டு...


பருப்பு கடக் மொடக் னு ஒரு மாதிரியா இருந்துச்சாம்.... கல்லா இருக்குமோணு வாயில இருந்து எடுத்து பாத்தா -


அது உருண்டை சைசுல இருக்ற எலும்பாம்...

குபீர் னு வேர்த்திரிச்சி... அந்த உருவத்தோட கைய பாத்தா... க்கெயிக்கு (கைக்கு) பதிலா எலும்பு இருந்துச்சாம்...ஒடனே ஒரே ஓட்டம் எடுத்து அண்ணா ஓட ஆரம்பிச்சுட்டார்.... ஆஹா பேயிடா...பேயிகிட்ட மாட்டிட்டோம் போல..னு பயந்து போயி உசுர கெய்யில (கையில்) புடிச்சிட்டு ஒரே ஓட்டம்...

கொஞ்சம் தூரம் போயி பாத்தா ... அந்த உருவம் காணோம்... அப்பாடா ... தப்பிச்சோம் னு நெனச்சி சந்தோஷப்பட்டுச்சாம்...


அப்ப ஒருத்தர் செயிக்குள்ள (சைக்கிளில்) வந்தார்... இந்த அண்ணனோ... லிப்டு கேட்டார்... அவரும் சரின்னு கொடுத்துட்டார்...


ஒரு பேயிடம் தான் மாட்டிகிட்டதாயும் அதுட்ருந்து தப்பிச்சி வேகமா வீட்டுக்கு போகணும் னு சொன்னான்...அவருன் தான் உதவுவதாய் உத்ரவாதம் கொடுத்தார்...

அந்த பேய் எப்டி இருக்கும் னு கேட்டார்...


அண்ணனோ தான் பாத்ததை எல்லாம் சொன்னார்... அது கையிகூட எலும்பா இருந்துச்சு என்றார்.


உடனே சைக்கிள் காரர் தன் கையை நீட்டி, "இப்டியா இருந்துச்சு...?" என்று கேட்டார்...

அது ... அதே... பேய்தான்...

ரத்தம் கக்கி அந்த இடத்லயே அந்த அண்ணா செத்துப்போனார்....

இப்டி கதைகள் ஒரு பெரிய பட்டியலாய் நீண்டு கொண்டிருந்தது...



அவர்கள் சொல்ல சொல்ல எங்களுக்கோ ஒரே ஆர்வம்... பேய் எப்படி இருக்கும் ...? அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் பெருகியது...

ஒரு நாள் நானும் சேதுவும் ரெடியானோம்... ..

கனவு தொடரும்.....

No comments: